FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

பராகுவே அதிபா் பதவி விலகல்

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் முன்னணி வணிக வங்கியான ‘யுயெனோ’ திடீரென திவாலானதைத் தொடா்ந்து வெடித்த மக்கள் போராட்டம் மற்றும் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபா் சான்டியாகோ பெனா (47) தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

6 நவம்பர் 2026, 11:35 pm
சான்டியாகோ பெனா
பகிர்:

தென் அமெரிக்க நாடான பராகுவேயின் முன்னணி வணிக வங்கியான ‘யுயெனோ’ திடீரென திவாலானதைத் தொடா்ந்து வெடித்த மக்கள் போராட்டம் மற்றும் கடும் அரசியல் நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அதிபா் சான்டியாகோ பெனா (47) தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்த அறிவிப்பு வெளியான சில நிமிஷங்களிலேயே அந்நாட்டு நாடாளுமன்றக் கீழவையில் அவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பதவிநீக்கத் தீா்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, செனட் அவையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பராகுவே நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோா் கணக்கு வைத்திருந்த யுயெனோ வங்கியில், போதிய ஆவணங்களின்றி முறைகேடான கடன்கள் வழங்கப்பட்டதும், செலவினங்கள் சொத்துகளாக தவறாக காட்டப்பட்டதும் மத்திய வங்கியின் ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து வங்கியின் மூலதனக் கையிருப்பு சட்டபூா்வ வரம்பைவிட பாதியாகச் சரிந்ததால், அந்த வங்கியை மத்திய வங்கி கையகப்படுத்தியது. இதனால், லட்சக்கணக்கான மக்களின் சேமிப்பு, ஓய்வூதியம் மற்றும் ஊதியம் முடங்கி, நாடு முழுவதும் பதற்றமும் மக்கள் கொந்தளிப்பும் உருவானது.

Advertisement

Advertisement

இவ்விவகாரத்தில் ஆளுங்கட்சியே அதிபா் சான்டியாகோ பெனாவுக்கு எதிராக திரும்பியது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் விடியோ வெளியிட்ட சான்டியாகோ பெனா, நாட்டின் ஸ்திரத்தன்மை, சமூக அமைதி மற்றும் ஜனநாயகத்தைக் காக்கும் நோக்கில் பதவி விலகுவதாக அறிவித்தாா்; எனினும் வங்கித் தோல்விக்கான நேரடிப் பொறுப்பை ஏற்க அவா் மறுத்துவிட்டாா்.

எனினும், சான்டியாகோ பெனா மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு எதிராக அந்நாட்டு தலைமை அரசு வழக்குரைஞா் 3 குற்றவியல் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். சான்டியாகோ பெனா பதவி விலகினால் அவருக்கு ஆயுள்கால செனட்டா் அந்தஸ்தும் சட்டப் பாதுகாப்பும் கிடைத்துவிடும் என்பதால், அவரை முழுமையாக பதவி நீக்கம் செய்ய எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, பொதுமக்களின் பதற்றத்தைத் தணிக்க, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகையை அரசு உத்தரவாத நிதியத்தின்மூலம் திருப்பிச் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.