FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார்? தேர்தலுக்குப் பின் நீடிக்கும் இழுபறி!

இஸ்ரேலின் அடுத்த பிரதமராகப் பதவியேற்க ஐசென்கோட்டுக்கு பெரும்பான்மை கிடைத்தும் நீடிக்கும் இழுபறி...

6 வினாடிகள் முன்பு
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு - ஐசென்கோட் - AP
பகிர்:

இஸ்ரேலின் புதிய அரசை யார் அமைப்பார்கள் என்பது இதுவரைத் தெளிவாகவில்லை என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில், கடந்த அக்டோபர் மாதம் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான லிகுட் கட்சியின் கூட்டணி 53 இடங்களை மட்டுமே வென்றது.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசென்கோட் கூட்டணி 48 இடங்களையும், முதல்முறையாக அரபு கட்சிகள் 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மேலும், நெதன்யாகு கூட்டணியில் இடம்பெற்று 7 இடங்களைக் கைப்பற்றிய யுனைடெட் தோரா ஜுடாயிஸம் எனும் கட்சி அவர் பிரதமராகத் தொடர ஆதரவு அளிக்க மறுத்துள்ளது.

Advertisement

Advertisement

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்குத் தேவையான 61 இடங்களை இதுவரை எந்தவொரு கட்சியும் கைப்பற்றவில்லை.

இதையடுத்து, கடந்த 2 நாள்களாக வெற்றி பெற்ற கட்சிகளுடன் புதிய அரசை உருவாக்குவது குறித்து இஸ்ரேலிய அதிபர் ஹெர்சாக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அப்போது, ஐசன்கோட் பிரதமராகப் பதவியேற்று புதிய ஆட்சியை அமைப்பதற்கு அரபு கட்சிகளின் கூட்டணி ஆதரவு தெரிவித்துள்ளது.

இருப்பினும், அரபு கட்சிகளின் ஆதரவை ஐசென்கோட் ஏற்பாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் தெரியவராததால் புதிய அரசை யார் அமைப்பார்கள் என்பது இன்னும் தெளிவாகவில்லை என அதிபர் ஹெர்சாக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“காடி ஐசென்கோட் அரசு அமைப்பதற்கு 67 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர். நெதன்யாகுவுக்கு 46 பேர் ஆதரவளித்துள்ளனர்.

ஆலோசனைகளின் முடிவுகள் தெளிவாகத் தோன்றினாலும், அரசு அமைக்கும் திறன் யாருக்கு உண்டு என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் குழுக்களுக்கு இடையே நிலவும் பரஸ்பர மறுப்புரிமைகள் காரணமாக இந்த விவகாரத்தில் இதுவரைத் தெளிவான நிலைப்பாடு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, நெதன்யாகு அரசின் நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலியர்கள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால், ஐசென்கோட் அரபு கட்சிகளின் ஆதரவை ஏற்று புதிய அரசை அமைப்பார் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

summary

Israeli President Isaac Herzog has stated that it is not yet clear who will form Israel's new government.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.