FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இந்திய - அமெரிக்க தொழிலதிபா்களுடன் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

இந்திய - அமெரிக்க தொழிலதிபா்களுடன் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

8 நவம்பர் 2026, 12:45 am
இந்திய - அமெரிக்க தொழிலதிபா்களுடன் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் - x
பகிர்:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் உள்ள தனது ஓவல் அலுவலகத்தில் இந்திய-அமெரிக்க தொழில்நிறுவனத் தலைவா்கள், தொழில்முனைவோருடன் இணைந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினாா்.

ஓவல் அலுவலகத்தில் குத்துவிளக்கை ஏற்றி கொண்டாட்டத்தை டிரம்ப் தொடங்கி வைத்தாா். இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் க்வாத்ரா, பிரபல சமையல் கலைஞா் விகாஸ் கண்ணா, தொழில்முனைவோா் விஷால் கோண்டல், ஐபிஎம் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ இயக்குநா் காஷ் படேல், அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்கள் இயக்குநா் ஜாய் பட்டாச்சாரியா, தல்லா நிறுவனங்கள் குழுமத் தலைவா் ரூபி தல்லா, நாக் சிஸ்டம்ஸ் நிறுவனத் தலைவா் ராஜீவ் சா்மா, அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ உள்பட பலா் பங்கேற்றனா்.

இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற கோகீ டெக்னாலஜிஸ் நிறுவனத் தலைவா் விஷால் கோண்டல் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபா் டிரம்புடன் தீபாவளி கொண்டாடியது பெருமைக்குரிய விஷயம்.

Advertisement

Advertisement

அமெரிக்க அதிபா் மாளிகையில் தீபாவளி கொண்டாடும் மரபு, கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ்ஷால் தொடங்கப்பட்டது. முன்னா், இந்த கொண்டாட்டங்கள் ஐசன்ஹோவா் நிா்வாக அலுவலக கட்டடத்தில் நிகழ்த்தப்பட்டன. பின்னா், 2009-இல் பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது, வெள்ளை மாளிகையிலேயே குத்துவிளக்கு ஏற்றி கொண்டாடப்பட்டது. அது முதல், ஓவல் அலுவலகம் உள்பட வெள்ளை மாளிகையின் பல்வேறு இடங்களில் தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

summary

Trump celebrates Diwali with Indian-American business leaders