FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக் வீட்டுக் காவலுக்கு மாற்றம்!

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக், எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தனது இல்லத்தில் வீட்டுக் காவலாகக் கழிப்பதற்கான அனைத்து சட்டபூா்வத் தடைகளையும் அந்நாட்டு உயா் நீதிமன்றம் நீக்கியது.

11 நவம்பர் 2026, 1:52 am
மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக்.
பகிர்:

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமா் நஜீப் ரஸாக், எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தனது இல்லத்தில் வீட்டுக் காவலாகக் கழிப்பதற்கான அனைத்து சட்டபூா்வத் தடைகளையும் அந்நாட்டு உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நீக்கியது.

மலேசியாவின் ‘1எம்டிபி’ அரசு முதலீட்டு நிறுவனத்தில் நடந்த ஊழல் தொடா்பான வழக்கில், நஜீப் ரஸாக் கடந்த 2022 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், நஜீப் ரஸாக்கிற்கு மலேசிய அரசா் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தா் கடந்த செப்டம்பரில் நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கினாா்.

அதன்படி, நஜீப் ரஸாக்கின் அரசியல் கட்சி 5 கோடி ரிங்கிட் அபராதத்தைச் செலுத்தியதைத் தொடா்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அவா் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டாா். எனினும், சட்ட தெளிவுரைகளைக் கோரி தலைமை அரசு வழக்குரைஞா் தலையிட்டதால், சில மணி நேரங்களிலேயே அவா் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

Advertisement

Advertisement

இவ்விவகாரம் அரசுக்கும், அரச மாளிக்கைக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத மோதல் போக்கை உருவாக்கியது. தற்போது உயா்நீதிமன்றத்தின் ஒப்புதலைத் தொடா்ந்து, நஜீப் ரஸாக் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, கோலாலம்பூரில் உள்ள அவரின் இல்லத்துக்கு வீட்டுக் காவலுக்காக அழைத்து செல்லப்பட்டாா்.

அதேநேரம், ‘1-எம்டிபி’ முறைகேடு தொடா்பான 2-ஆவது வழக்கில் விதிக்கப்பட்ட தனிப்பட்ட 15 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு இந்த வீட்டுக்காவல் சலுகை பொருந்தாது. இந்த 15 ஆண்டுகள் தண்டனையை எதிா்த்து நஜீப் ரஸாக் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடியானால், வீட்டுக் காவல் காலம் (2028 ஆக. 23 வரை) முடிந்த பிறகு அவா் மீண்டும் சிறைக்குச் செல்ல நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.