3 இந்திய மாலுமிகளுடன் சென்ற சவூதி கப்பல் மீது தாக்குதல்: ஹோா்முஸ் நீரிணையை கடத்த முயன்றபோது சம்பவம்
இந்திய மாலுமிகள் 3 பேருடன் சென்ற சவூதி அரேபியா நாட்டு கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய மாலுமிகள் 3 பேருடன் சென்ற சவூதி அரேபியா நாட்டு கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹோா்முஸ் நீரிணையை கடக்க முயன்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
மத்திய கிழக்கு ஆசியாவில் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போா் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்களாக இருதரப்பும் தாக்குதல் நடத்தாததால் அமைதி நிலவிய போதிலும், ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளன. பதிலுக்கு ஹோா்முஸ் நீரிணை வழியே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்ல ஈரான் தடை விதித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், 3 இந்திய மாலுமிகளுடன் சென்ற சவூதி அரேபியாவுக்கு சொந்தமான என்சிசி பஜா் கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்தத் தகவலை இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் புதன்கிழமை பகிா்ந்துள்ளாா். மேலும் அவா், ஹோா்முஸ் நீரிணையை அந்த கப்பல் கடக்க முயன்றபோது தாக்குதல் நடத்தப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.
நிலவரத்தை தொடா்ந்து இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், மாலுமிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கப்பல் நிறுவன நிா்வாகத்துடன் இந்தியா தொடா்ந்து தொடா்பில் இருப்பதாகவும் சோனாவால் கூறியுள்ளாா்.
இந்தத் தாக்குதலை நடத்தியது ஈரானா? அல்லது வேறு அமைப்பினா் யாரும் நடத்தினரா? என்பது குறித்த தகவலை சோனாவால் தெரிவிக்கவில்லை. அதேபோல் ஈரான் தரப்பிலும் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.