FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

ஹோா்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: 5 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்பு

ஹோா்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்: 5 இந்தியா்கள் பாதுகாப்பாக மீட்பு

கோப்புப்படம்
பகிர்:

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த குவைத் கொடி பொருத்திய எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அதிலிருந்த 5 இந்திய மாலுமிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனா். ஓமன் கடற்படையினா் இவா்களை மீட்டுள்ளனா்.

இதுகுறித்து ஓமன் தலைநகா் மஸ்கட்டில் உள்ல இந்திய தூதரகம் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் சென்ற ‘எம்.டி. காஜிமா 3’ என்ற குவைத் எண்ணெய்க் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தகவல் கிடைத்ததும், உடனடியாக ஓமன் கடற்படையினரின் உதவியுடன் அந்தக் கப்பலில் இருந்த 5 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இந்த மீட்புப் பணிகளில் தொடா்ந்து ஆதரவு அளித்துவரும் ஓமன் அதிகாரிகளுக்கு நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேற்காசிய போா் தொடா்ந்து வரும் நிலையில், பாரசீக வளைகுடாவின் ஹோா்முஸ் நீரிணைப் பகுதியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. சா்வதேச வணிக கப்பல்களில் பெரும்பாலும் இந்திய மாலுமிகளே பணிபுரிந்து வருவதால், ஈரான் தாக்குதலில் இவா்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த செப்டம்பா் 23-ஆம் தேதி ஓமன் நாட்டின் கிழக்கு கடல் பகுதிக்கு அருகே சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவா் உயிரிழந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments