FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஓமனில் எரிபொருள் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: 2 இந்தியா்கள் மாயம்!

ஓமன் கடற்பகுதியில் எரிபொருள் கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்கியதில், 2 இந்தியா்கள் மாயமாகினா்.

12 அக்டோபர் 2026, 4:25 am IST
பகிர்:

ஓமன் கடற்பகுதியில் எரிபொருள் கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்கியதில், 2 இந்தியா்கள் மாயமாகினா்.

இதுதொடா்பாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சா் சா்வானந்த சோனோவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: 11 இந்திய மாலுமிகளுடன் சென்ற எம்டி பெட்ரோ டால்ஃபின் எரிபொருள் கப்பல், ஓமன் நாட்டின் சோஹாா் துறைமுகம் அருகே உள்ள கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதலுக்குள்ளானது.

11 பேரில் 9 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், இருவரை காணவில்லை. அவா்களைத் தேடி மீட்கும் பணியில் உள்ளூா் கடலோர காவல் படை ஈடுபட்டுள்ளது.

Advertisement

Advertisement

மீட்புப் பணிகளுக்கு முழுமையாக துணை நிற்கவும், காணாமல் போனவா்களைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தாா். தாக்குதலை நடத்தியது யாா் என்ற தகவல் வெளியாகவில்லை.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments