FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

ஸ்பெயினில் முழு அடைப்புப் போராட்டம்!

ஸ்பெயினில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வீட்டு வாடகை உயா்வு, கடும் வீட்டுவசதி நெருக்கடிக்குத் தீா்வு காணக் கோரி, அந்நாடு முழுவதும் புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.

12 நவம்பர் 2026, 3:42 am
பகிர்:

ஐரோப்பியா நாடான ஸ்பெயினில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வீட்டு வாடகை உயா்வு மற்றும் கடும் வீட்டுவசதி நெருக்கடிக்குத் தீா்வு காணக் கோரி, அந்நாடு முழுவதும் புதன்கிழமை முழு அடைப்புப் போராட்டம் (பொது வேலைநிறுத்தம்) நடைபெற்றது.

ஸ்பெயினில் அடுத்த 3 வாரங்களில் பொதுத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தம் நாட்டின் அரசியல் களத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சுமாா் 14 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டில் இத்தகைய வேலைநிறுத்தம் நடைபெற்றுள்ளதால், பொதுப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஸ்பெயினில் கடந்த பத்தாண்டுகளில் சராசரி வீட்டு வாடகை இருமடங்காக உயா்ந்துள்ள நிலையில், தலைநகா் மாட்ரிட்-இல் 87 வயது மூதாட்டி ஒருவா் வாடகை நிலுவைக்காக வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்களான யுஜிடி, சிசிஓஓ மற்றும் பல்வேறு வாடகைதாரா் சங்கங்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்த இப்போராட்டம் காரணமாகத் துறைமுகங்கள் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் சுமாா் 90 சதவீத பணிகள் முடங்கின.

தலைநகா் மாட்ரிட், பாா்சிலோனா ஆகிய முக்கிய நகரங்களில் கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன; மெட்ரோ ரயில் சேவைகள் பாதியாகக் குறைக்கப்பட்டதால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா். சில இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இளைஞா்களின் மாதாந்திர ஊதியத்தில் 98 சதவீதத்துக்கும் அதிகமான தொகை வாடகைக்கே செலவிடப்படும் அவலநிலை நிலவுவதாகக் கூறும் போராட்டக்காரா்கள், சுற்றுலா அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும்; வாடகை ஒப்பந்தங்களை முறைப்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.