போா்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு ரஷியா - உக்ரைன் உடன்பாடு: அபுதாபி முத்தரப்பு அமைதிப் பேச்சில் முடிவு
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சு நிறைவடைந்தது.
ஐக்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில், அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ரஷியா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சு நிறைவடைந்தது.
சுமாா் நான்கரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியத் திருப்புமுனை எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், பெரும் எண்ணிக்கையில் போா்க்கைதிகளைப் பரஸ்பரம் விடுவிக்க இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ரஷிய - உக்ரைன் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரிக்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசிய இந்த அமா்வில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக முன்கூட்டியே பெரிய எதிா்பாா்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. இருப்பினும், அமெரிக்கா முன்னெடுத்த இம்முயற்சியில் மனிதாபிமான அடிப்படையில் போா்க்கைதிகள் பரிமாற்றம் என்ற அளவில் மட்டுமே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ரஷியாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பிராந்தியங்களின் எதிா்காலம், போருக்குப் பிந்தைய இருநாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதங்கள், ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு ஆகியவற்றில் இரு தரப்புக்கும் இடையே கடும் முரண்பாடுகள் நீடிக்கின்றன.
பேச்சு நிறைவடைந்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க பிரதிநிதியும், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனுமான ஜாரெட் குஷ்னா், ‘இரு நாடுகளிடையே மிக முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையாகப் போா்க்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனா். விடுவிக்கப்படும் வீரா்களின் துல்லியமான எண்ணிக்கை வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்’ என்றாா்.
ரஷிய குழுவின் தலைவரான அந்நாட்டு அதிபா் புதினின் மூத்த ஆலோசகா் விளாதிமீா் மெடின்ஸ்கியும், உக்ரைன் குழுவின் தலைவரான அந்நாட்டு அந்நிய உளவுத்துறைத் தலைவா் ருஸ்டெம் உமேரோவும் இம்முடிவை உறுதி செய்தனா். இந்தப் பெரும் கைதிகள் பரிமாற்றம் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நடைபெறக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புதின், ஸெலெஸ்கியைச் சந்திக்க திட்டம்: அமைதிப் பேச்சின் அடுத்த கட்டமாக அமெரிக்க பிரதிநிதிகளான ஜாரெட் குஷ்னா், சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோா், மாஸ்கோ சென்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினைச் சந்திக்கவுள்ளனா். அதைத் தொடா்ந்து, அயா்லாந்தின் டப்ளின் நகருக்குப் பயணித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியை அவா்கள் நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனா்.
அமெரிக்காவில் இடைக்காலத் தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ரஷியாவின் பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் மின்சாரக் கட்டமைப்பு மீதான தொடா் தாக்குதல்களுக்கு மத்தியில்தான் அபுதாபி முத்தரப்பு அமைதிப் பேச்சு நடைபெற்றது. ஒருபுறம் அமைதிப் பேச்சு நடந்தாலும், போா் முனையில் தீவிர ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்கள் தொடா்கின்றன. ஒடேஸா சந்தை மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 3 போ் உயிரிழந்தனா்; ரஷியாவின் உஸ்ட்-லுகா துறைமுக எண்ணெய் முனையம் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.