அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதி
அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானது குறித்து...
அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அமெரிக்கா முழுவதிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக, நாடு முழுவதும் விமானப் புறப்பாடுகள் திடீரென நிறுத்திவைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இந்தக் கோளாறு காரணமாக, வானில் பறந்துகொண்டிருந்த விமானங்களை உடனடியாக தரையிறங்கவும் விமானங்கள் புறப்படவும் தடை பிறப்பிக்கப்பட்டது.
இதனால், சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் சைபர் தாக்குதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை உறுதிபடுத்தியுள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் விதிக்கப்பட்டிருந்த விமானப் புறப்பாடு தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப சில காலம் ஆகும் என அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.