FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து! யார் இந்த ஷேரு பாய்?

உலகையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து வைத்திருக்கும் ஷேரு பாய் குறித்து...

4 வினாடிகள் முன்பு
- சித்திரிப்பு
பகிர்:

உலகையே விலைக்கு வாங்கும் அளவுக்கு சொத்து வைத்திருக்கும் ஷேரு பாய் என்ற கற்பனைக் கதாபாத்திரம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தற்போதைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விண்வெளி, பாதுகாப்பு, ஐடி, சினிமா என பல துறைகளிலும் தவிர்க்க முடியாத பயன்பாடாக செய்யறிவு மாறி விட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, செய்யறிவு மூலம் விடியோக்களை உருவாக்கி அவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருமானம் ஈட்டுபவர்களும் அதிகமாகி விட்டனர்.

மனிதர்களின் உள்ளுறுப்புகள், பறவைகள், காய்கறிகள், விலங்குகள் முதலானவை மனிதர்களைப் போல பேசுவது தொடங்கி, மனிதர்களையே கலாய்க்கும் அளவுக்கு ஏஐ விடியோக்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அப்படியொரு கற்பனைக் கதாபாத்திரம்தான் ஷேரு பாய். உலகையே விலைக்கு வாங்கும் அளவுக்கு முடிவிலா சொத்து வைத்திருக்கும் ஏஐ கதாபாத்திரமாக ஷேரு பாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. கோட்-சூட் உடையில் மனித உடலில் வெள்ளை சிங்கத்தின் தலையுடன் இந்தக் கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டிருக்கும்.

ஆடம்பர வாழ்க்கை, பயணம், வணிகம் உள்ளிட்டவற்றை கருவாகக் கொண்டு ஷேரு பாய் சிங்கத்தின் நகைச்சுவை எபிசோடுகளுக்கு ரசிகர்கள் பட்டாளமும் உருவாகியுள்ளது. இந்த ஏஐ கதாபாத்திரத்தை சமூக ஊடகங்களில் பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இதுதவிர கொழுக்கு மொழுக்கு தக்காளி, தேங்காய் தேனாண்டாள், அண்ணாச்சி (அன்னாசி) என்ற ஏஐ கதாபாத்திரங்களும் டிரெண்டிங்கில் உள்ளன.

- Instagram
summary

Sheru Bhai possesses enough wealth to buy the entire world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.