FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அமெரிக்காவில் இரு விமானங்கள் மோதி விபத்து: 2 பேருக்கு காயம்

மியாமி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்ட விபத்துப் பற்றி...

14 வினாடிகள் முன்பு
விபத்தில் சிக்கிய விமானங்கள். - Photo grab X Video
பகிர்:

அமெரிக்காவில் விமானப் போக்குவரத்து முடங்கிய மறுநாளே, மியாமி விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் மியாமி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த கோபா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானமும், யுபிஎஸ் நிறுவனத்தின் போயிங் 767 சரக்கு விமானமும் சனிக்கிழமை இரவு மோதிக்கொண்டன. இதில் இருவர் காயமடைந்தனர்.

Advertisement

Advertisement

இந்தச் சம்பவம் இரவு 9:15 மணியளவில் நிகழ்ந்தது. அப்போது, கோபா ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கையின் நுனிப்பகுதி, யுபிஎஸ் சரக்கு விமானத்தின் முன்பகுதியில் மோதியது. பனாமா நகரிலிருந்து வந்த அந்த கோபா ஏர்லைன்ஸ் விமானத்தில் 166 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.

பின்னர், விமானம் முனையத்திற்குக் கொண்டு வரப்பட்டு, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். முதற்கட்ட தகவலின்படி, காயமடைந்த இரு பயணிகளுக்கு விமான நிலைய மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களுக்குச் சிறிய அளவிலான காயங்களே ஏற்பட்டுள்ளன என்று தெரியவந்துள்ளது.

மற்ற பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள கோபா ஏர்லைன்ஸ் நிறுவனம், பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களுக்கு முதன்மையானது என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மோதல் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் கோபா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்து முடக்கப்பட்டதால், லட்சக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் சிக்கித் தவித்த மறுநாளே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Two people sustained minor injuries after two aircraft collided at Miami International Airport in the US state of Florida.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.