மூடப்படும் மும்பை விமான நிலைய முதல் முனையம்! 1 கோடி பயணிகள் என்ன ஆவார்கள்?
மும்பை விமான நிலையத்தின் முதல் முனையம் மூடப்படும் நிலையில், 1 கோடி பயணிகள் என்ன ஆவார்கள் என்பது பற்றி....
மிகப்பெரிய மறுசீரமைப்புப் பணிகளுக்காக சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையம் அக்டோபர் இறுதிக்குள் மூடப்படவிருக்கிறது.
2027ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, முதல் முனையத்தின் வடக்குப் பகுதி இடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், மும்பை விமான நிலையத்தின் முதல் முனையத்துக்கு வரும் விமானங்கள் இரண்டாவது முனையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையங்களில் இருந்து இயக்கும் வகையில் திட்டங்கள் மாற்றியமைக்கப்படவிருக்கின்றன.
Advertisement
Advertisement
முதல் முனையம் மூடப்படுவதால் சுமார் ஒரு கோடி பயணிகள் சற்று அதிக தொலைவு பயணம் செய்து விமான நிலையங்களை அடையும் நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. ஒரு வேளை நவி மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவாகும் என்றும் பயணிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே மும்பை சாலைகள் நெரிசலில் தவிக்கின்றன. இப்படி நவி விமான நிலையம் செல்ல வேண்டும் என்றால் மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும். இதனால் நவி மும்பை -- மும்பை இடையே போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முதல் முனையத்தின் மொத்த விமான சேவையில் ஒரு பகுதி அக்டோபர் முதல் வாரத்தில் நவி மும்பை விமான நிலையத்துக்கும், 25ஆம் தேதி வாக்கில் மும்பை விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கும் மாற்றப்படவிருக்கிறது.
சீரமைப்புப் பணி தொடங்குவதற்கு முன்பு,கிட்டத்தட்ட மூன்றரை மாதங்கள் இங்கு பல்வேறு பணிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.