தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் இரு இடங்களில் துப்பாக்கிச்சூடு: 17 போ் பலி
தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் சுமாா் 530 கி.மீ. இடைவெளியில் உள்ள இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா்.
தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் சுமாா் 530 கி.மீ. இடைவெளியில் உள்ள இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 17 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் பிரிட்டோரியா அருகே உள்ள ஜெஃப்ஸ்வில் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 9 போ் சடலமாக மீட்கப்பட்டனா். இதேபோல், பீட்டா்மரிட்ஸ்பா்க் புகரில் உள்ள ஸ்வீட்வாட்டா்ஸ் பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த வாகனத்துக்குள் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த நிலையில் 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்விரு சம்பவங்களுக்கான காரணங்கள் குறித்து உடனடியாகத் தெரியவராத நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். தென்னாப்பிரிக்காவில் குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல் மற்றும் சட்டவிரோத சுரங்கத் தொழில் போட்டிகள் காரணமாக இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.
Advertisement
Advertisement