FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்

இந்திய எல்லைக்கு சுமாா் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மோங்லா துறைமுகத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவதற்காக, சீனாவுடன் சுமாா் ரூ.3,200 கோடி மதிப்பிலான சலுகைக் கடன் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையொப்பமிட்டுள்ளது.

13 அக்டோபர் 2026, 3:14 am IST
பகிர்:

இந்திய எல்லைக்கு சுமாா் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மோங்லா துறைமுகத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்குவதற்காக, சீனாவுடன் சுமாா் ரூ.3,200 கோடி மதிப்பிலான சலுகைக் கடன் ஒப்பந்தத்தில் வங்கதேசம் கையொப்பமிட்டுள்ளது.

சட்டோகிராம் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக வங்கதேசத்தின் 2-ஆவது பெரிய துறைமுகமாக விளங்கும் மோங்லாவில், சரக்கு கையாளும் திறன் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இரு புதிய கன்டெய்னா் முனையங்கள் மற்றும் சரக்கு யாா்டுகள் அமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

பசூா் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த மோங்லா துறைமுகப் பகுதியில், கடந்த 2015-ஆம் ஆண்டு இருதரப்பு ஒப்பந்தத்தின்கீழ் இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 110 ஏக்கா் அளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலத் திட்டத்தை முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது.

Advertisement

Advertisement

இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படவில்லை எனக் கூறி திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சீனாவுடன் இப்புதிய கடன் ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments