முகப்பு

நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் ஓசையில்லாமல் ஆக்கிய தென்கொரியா! ஆச்சரிய தகவல்

நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் ஓசையில்லாமல் ஆக்கிய தென்கொரிய அரசு பற்றிய ஆச்சரிய தகவல்

நுழைவுத் தேர்வுக்காக நாடு முழுவதும் ஓசையில்லாமல் ஆக்கிய தென்கொரியா! ஆச்சரிய தகவல்
தேர்வு - பிரதி படம்
பகிர்:

தென்கொரியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான செல்போன்கள் சைலன்ட் மோடுக்குச் சென்றன, விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன், ஒரே ஒரு நாள் நுழைவுத் தேர்வுக்காக ஒட்டுமொத்த தென்கொரியாவும் ஒரு சிறு ஓசையும் எழாமல் அமைதியாக சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

பள்ளிப் படிப்பு முடிந்ததும், நிம்மதியடையாமல், அடுத்து எத்தனை நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டும் என்று நம் நாட்டு இளைஞர்கள் தவித்துக் கொண்டிருக்கும்போதுதான், தென்கொரியாவில் நடந்த நுழைவுத் தேர்வு குறித்த தகவல் வெளியாகி ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தென்கொரியாவில் மாணவர்களுக்கு, கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வில், காதால் ஒலி வடிவில் கேள்விகளைக் கேட்டு பதிலளிக்கும் ஒரு பகுதி உள்ளது.

Advertisement

Advertisement

இந்த நேரத்தில், வேறு எந்த சப்தங்களும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக, தென்கொரிய அரசு, நாட்டு மக்களுக்கு ஒரு அறிவுறுத்தலை அனுப்பியது.

நாடு முழுவதும் அந்த தேர்வு நேரத்தில் யாரும் எந்த சப்தமும் எழுப்பக்கூடாது. செல்போன்கள் சைலன்ட் மோடில் வைக்கப்பட வேண்டும். விமான சேவை நிறுத்தப்பட வேண்டும் என்பதே அது.

இது குறித்து நவ. 18ஆம் தேதி தென்கொரிய மக்களுக்கு முன்னெச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டு, தேர்வு நேரம் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

அதுபோலவே நாட்டு மக்களும் தேர்வு நேரத்தில் முழு அமைதியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களுக்கு உதவினர். அந்த நேரத்தில், ஒட்டுமொத்த தென்கொரியாவும் அமைதியில் ஆழ்ந்திருந்தது.

summary

South Korea brings the entire nation to a hush for its entrance exams! A surprising fact.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.