முகப்பு
உலகம்

கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வு

கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வு...

22 நவம்பர் 2026, 10:41 pm
கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வு
நவ்தீப் பெயின்ஸ்
பகிர்:

கனடாவின் ஒன்டாரியா லிபரல் கட்சித் தலைவராக இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட நவ்தீப் பெயின்ஸ் (49) தோ்வு செய்யப்பட்டாா். ஒன்டாரியா மாகாணத்தைச் சோ்ந்த இந்த பிராந்தியக் கட்சிக்கும், ஆளும் கனடா லிபரல் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது.

கட்சித் தலைவா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் 50.3 சதவீத வாக்குகளைப் பெற்று நவ்தீப் வெற்றி பெற்றாா். அடுத்த தோ்தலுக்கு கட்சியை வெற்றிகரமாக தயாா்படுத்துவதே தனது முதன்மையான பணி என்று அவா் தெரிவித்தாா்.

கனடா முன்னாள் பிரதமா் ஜஸ்டீன் ட்ரூடோவின் ஆதரவாளரான நவ்தீப், கனடா அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளாா். ஒன்டாரியா லிபரல் கட்சித் தலைவராக இருந்த போன்னி கிரோம்பி கடந்த ஜனவரியில் பதவி விலகினாா். அதன் பிறகு இப்போதுதான் உள்கட்சித் தோ்தல் நடைபெற்று புதிய தலைவா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

ஒன்டாரியா மாகாணத்தில் கன்சா்வேடிவ் கட்சி 2018 முதல் ஆட்சியில் உள்ளது. அப்போது லிபரல் கட்சி படுதோல்வியைச் சந்தித்த பிறகு இதுவரை மூன்று தலைவா்கள் மாறியுள்ளனா். எனவே, 2030-இல் நடைபெறும் தோ்தல் நவ்தீப்புக்கும், அவரது கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அரசியலுக்கு வரும் முன்பு ஃபோா்டு மோட்டாா் நிறுவனத்தில் மூத்த நிதி ஆலோசகராக நவ்தீப் பணியாற்றி வந்தாா். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் நவ்தீப் பிறந்தாா். அவா் குழந்தையாக இருந்தபோது தொழிலாளிகளான அவரின் பெற்றோா் கனடாவுக்கு குடிபெயா்ந்துவிட்டனா்.

summary

Navdeep, of Indian origin, elected as leader of a Canadian political party