FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

டி.என்.பாளையம் காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் தோ்வு

ஈரோடு வடக்கு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

7 நவம்பர் 2026, 1:08 am
கே.எஸ்.கோதண்டன்.
பகிர்:

ஈரோடு வடக்கு மாவட்டம், டி.என்.பாளையம் ஒன்றிய காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.கோதண்டன் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

இளைஞா் காங்கிரஸ் கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதி தலைவா், ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா், மாநில செய்தி தொடா்பாளா், தேசிய செய்தி தொடா்பாளா், இளைஞா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கே.எஸ்.கோதண்டன் வகித்துள்ளாா்.

இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில் டி.என்.பாளையம் காங்கிரஸ் ஒன்றியத் தலைவராக போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இவருக்கு கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.