நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரான் திட்டவட்டம்
அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்திய 7 நிபந்தனைகள் தொடர்பாக...

ஈரான் வலியுறுத்திய 7 நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கிடையாது என ஈரான் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதனை ஈரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரும் நாடாளுமன்ற தலைவருமான முகமது பாகர் காலிபாஃப் உறுதியாகத் தெரிவித்தார்.
ஈரானின் நிபந்தனைகள் பற்றி அவர் வெளிப்படையாகக் கூறவில்லை. ஆனால், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்குதல், துறைமுகங்கள் மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் போன்ற முக்கிய நிபந்தனைகள் அதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அமெரிக்கா ஏதேனும் தவறான நடவடிக்கை எடுத்தால் அது இந்தப் பிராந்திய மோதலின் எல்லைகளை மாற்றியமைக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அதேநேரம், ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் கடலுக்கு அடியில் இருந்த கண்ணிவெடிகளில் சிக்கி தீப்பிடித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
விதிமுறைகளை மீறிச் சென்றதால் அவ்வாறு நடைபெற்றதாகவும், அங்கீகரிக்கப்படாத பாதைகளைச் சோதிக்கவும் கடல்சார் எச்சரிக்கைகளை புறக்கணிக்கவும் ஹோர்முஸ் நீரிணை உகந்த இடமல்ல என்றும் ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரித்துள்ளது.