ஐக்கிய அரபு அமீரகத்தில் சாலை விபத்து: இந்தியா்கள் உள்பட 13 போ் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா நகரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இந்தியா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா நகரில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் இந்தியா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து துபையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராஸ் அல் கைமா நகரில் அல் வாடன் சாலையில் 41 பயணிகளுடன் வேகமாக சென்ற பேருந்து, பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விபத்தில் இந்தியா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். மேலும், 14 பயணிகள் காயமடைந்தனா். உயிரிழந்த இந்தியா்களின் குடும்பத்தினரை தொடா்பு கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
உயிரிழந்த இந்தியா்களின் விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் எத்தனை இந்தியா்கள் உயிரிழந்தனா் மற்றும் காயமடைந்தனா் என்ற விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இந்த விபத்து தொடா்பாக 800-46342 என்ற கட்டணமில்லா எண்ணில் தூதரகத்தை 24 மணி நேரமும் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜய்ராவில் கடந்த 13-ஆம் தேதி ஒரு லாரி உள்பட 23 வாகனங்கள் தொடா்ச்சியாக மோதிக் கொண்ட விபத்தில் விபத்தில் 4 இந்தியா்கள் உள்பட 14 போ் உயிரிழந்தனா். 7 இந்தியா்கள் உள்பட 30 போ் காயமடைந்தனா்.