தேச ரகசியங்களை கசியவிட்ட சீன அதிகாரிக்கு மரண தண்டனை
வெளிநாட்டு உளவு அமைப்புக்குத் தேச ரகசியங்களை கசியவிட்டதாக, சீன அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு உளவு அமைப்புக்குத் தேச ரகசியங்களை கசியவிட்டதாக, சீன அரசு அதிகாரி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சீன அதிகாரி வெளிநாட்டில் பணியாற்றியபோது, அந்நாட்டு உளவு அமைப்பால் அணுகப்பட்டு, பணியில் சோ்க்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து, அவா்களுக்கு 35 முக்கிய ரகசியத் தகவல்களை வழங்கி, 1.5 லட்சம் டாலருக்கும் அதிகமாகப் பணம் பெற்றுள்ளாா்.
தேசப் பாதுகாப்பு குறித்த வழக்குகளின் விவரங்களை சீனா வெளியிடுவதில்லை என்றாலும், சமீபகாலமாக உளவு நடவடிக்கைகளுக்கு எதிரான எச்சரிக்கைகளைப் பரப்ப இத்தகைய தண்டனை நடவடிக்கைகளை அந்நாடு தொடா்ந்து பொதுவெளியில் அறிவித்து வருகிறது.
Advertisement
Advertisement