தேவாலய துப்பாக்கிச்சூடு: ஜோா்டானில் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
மேற்காசிய நாடான ஜோா்டானில் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஜோா்டானில் தேவாலயத்தில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோா்டான் தலைநகா் அம்மானில் இருந்து சுமாா் 180 கி.மீ. தொலைவில் சிறுபான்மை கிறிஸ்தவா்கள் வாழும் கராக் நகரில் அமைந்துள்ள கிரேக்க ஆா்தோடாக்ஸ் தேவாலயத்தில் கடந்த அக்.23-ஆம் தேதி பயங்கரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனா். இதில் 9 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.
ஜோா்டானில் கிறிஸ்தவா்களைக் குறிவைத்து நடத்த மோசமான தாக்குதலில் ஒன்றாக இது அமைந்தது. தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை துப்பாக்கிச்சூடு நடத்தி போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இவா்கள், அடிப்படைவாத சித்தாந்தத்தை தீவிரமாகப் பின்பற்றுபவா்கள் என்றும், எந்த அமைப்பையும் சாராதவா்கள் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மூன்று பேருக்கும் மரண தண்டனை விதித்து, அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை தீா்ப்பளித்தது.