கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் தண்டனை
திருப்பூரில் கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் கொலை வழக்கில் தொடா்புடைய முதியவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2022 டிசம்பா் 21-ஆம் தேதி எஸ்.வி காலனி 8-ஆவது வீதியைச் சோ்ந்த சந்திரமணி (67) என்பவரை கழுத்தை அறுத்து கொலை செய்து, அவரிடமிருந்து ஐந்தரை பவுன் தாலிக் கொடியை பறித்து சென்றதாக ஆறுமுகம் (66) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், திருப்பூா் மாவட்டம், மகிளா விரைவு நீதிமன்ற நடுவா் கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட ஆறுமுகத்துக்கு ஒரு பிரிவில் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகையை கட்டத் தவறினால், ஓா் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், மற்றொரு பிரிவில் அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு, அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இவ்விரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் தீா்ப்பு வழங்கினாா். இவ்வழக்கில் அரசு வழக்குரைஞா் பூங்கொடி ஆஜரானாா்.
Advertisement
Advertisement