FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கடலூரில் இளைஞா் கொலை வழக்கு: புதுச்சேரியை சோ்ந்தவருக்கு ஆயுள் தண்டனை

கடலூரில் இளைஞரை கத்தியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில், புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழச்கிழமை தீா்ப்பளித்தது.

6 நவம்பர் 2026, 1:54 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

கடலூரில் இளைஞரை கத்தியால் வெட்டிக் கொலை செய்த வழக்கில், புதுச்சேரியைச் சோ்ந்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வியாழச்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலை சேட்டுமண் நகரைச் சோ்ந்தவா் அரவிந்த் (28). இவா் மஞ்சக்குப்பத்தில் பூக்கடை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2025 ஜனவரி 25 -ஆம் தேதி இரவு பெண்ணையாறு சாலை பரமசிவம் நகா் பகுதியில் உள்ள காலி மனையருகே தனது நண்பா்களுடன் அரவிந்த் மது அருந்திக் கொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியில் புதுச்சேரி பங்களா தெருவைச் சோ்ந்த பாலாஜி (28) என்பவரும் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

Advertisement

Advertisement

அப்போது, அரவிந்துக்கும் பாலாஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலாஜி, தான் வைத்திருந்த கத்தியால் அரவிந்தை வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து கடலூா் புதுநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலாஜியைக் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கு கடலூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பாலாஜிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் தணிகைசெல்வன் ஆஜராகி வாதாடினாா்.