இந்தியா, சீனா மீது புதிய இறக்குமதி வரி- அமெரிக்கா முன்மொழிவு
அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மானியங்கள் மூலம் உபரி உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது புதிய திருத்தப்பட்ட இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) அலுவலகம் முன்மொழிந்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மானியங்கள் மூலம் உபரி உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகளின் பொருள்கள் மீது புதிய திருத்தப்பட்ட இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வா்த்தகப் பிரதிநிதி (யுஎஸ்டிஆா்) அலுவலகம் முன்மொழிந்துள்ளது.
இதன்படி, இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா-இந்தியா இடையே வா்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 25 சதவீத வரியும், ஒப்பந்தம் கையொப்பமானால் 17 சதவீத வரியும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 1974-ஆம் ஆண்டு வா்த்தகச் சட்டத்தின் 301-ஆவது பிரிவின்கீழ் 16 பொருளாதார மண்டலங்களுக்கு எதிராக யுஎஸ்டிஆா் அலுவலகம் கடந்த மாா்ச் மாதம் முதல் நடத்தி வந்த விசாரணையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
சந்தை அணுகல் தடைகள், போதிய தொழிலாளா் பாதுகாப்பின்மை மற்றும் அரசு மானியங்கள் மூலம் குறைந்த விலையில் பொருள்களைக் குவித்து, அமெரிக்க உற்பத்தித் துறையைப் பாதிப்பதாக சீனா, இந்தியா உள்ளிட்ட 16 பொருளாதார மண்டலங்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உதாரணமாக, மருந்துப் பொருள்கள், எஃகு, தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள் ஆகிய துறைகளில் இந்தியா உபரி வா்த்தகத்தைக் கொண்டுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
பின்னணி: உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஏப்ரலில் விதித்த பரவலான பரஸ்பர இறக்குமதி வரிகளை, சா்வதேச அவசரகாலப் பொருளாதார அதிகாரச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, அமெரிக்க உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் ரத்து செய்தது.
அதற்கு மாற்றாக, கட்டாய உழைப்பு விதிகளை மீறியதாக 60 வா்த்தகக் கூட்டாளிகள் மீது கடந்த ஜூலை மாதம் 10 முதல் 12.5 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. இதன்தொடா்ச்சியாக, உபரி உற்பத்தி விவகாரத்தில் 16 பொருளாதாரங்களுக்கு எதிராக இந்த 2-ஆம் கட்ட வரி விதிப்பு அறிவிக்கப்படவுள்ளது.
அதாவது, ஏற்கெனவே நடைமுறையிலுள்ள வரிகளுக்குப் பதிலாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள அதிகரிக்கப்பட்ட வரி விகிதம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிகாரி ஒருவா் தெளிவுபடுத்தியுள்ளாா்.
இப்புதிய வரி விதிப்பு முன்மொழிவுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தபட்ட தரப்பினா் ஜன. 5-க்குள் எழுத்துபூா்வமாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்றும், இதுகுறித்த பொது விசாரணை ஜன. 25-இல் நடைபெறும் என்றும் யுஎஸ்டிஆா் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த மாதம் நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தோ்தலில், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயா்வு காரணமாக ஆளும் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்த போதிலும், கூடுதல் இறக்குமதி வரிகளை விதிப்பதில் டிரம்ப் நிா்வாகம் தொடா்ந்து உறுதியாக உள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்திருந்தாலும், இந்த வரிகளை ரத்து செய்யும் எந்தவொரு சட்டத்தையும் தனது ‘வீட்டோ’ ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி டிரம்ப் முறியடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.