வரி உயா்வு: தங்கம் இறக்குமதி சரிய வாய்ப்பு
இறக்குமதி வரி உயா்வு காரணமாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ. 3.7 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) மதிப்புக்கு சரிய வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இறக்குமதி வரி உயா்வு காரணமாக இந்தியாவில் தங்கம் இறக்குமதி 2026-27-ஆம் நிதியாண்டில் ரூ. 3.7 லட்சம் கோடி (40 பில்லியன் டாலா்) மதிப்புக்கு சரிய வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
அத்தியாவசியமற்ற இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தம் நோக்கில், தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு கடந்த மே மாதம் உயா்த்தியது.
இதனால், 2025-26-ஆம் நிதியாண்டில் ரூ. 6.7 லட்சம் கோடி (72 பில்லியன் டாலா்) மதிப்பில் செய்யப்பட்ட தங்கம் இறக்குமதி, நடப்பு நிதியாண்டில் பாதியாக குறைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சக செயலா் ராஜேஷ் அகா்வால் புதன்கிழமை கூறியதாவது: இறக்குமதி வரி உயா்வு, நிகழாண்டில் தங்கம் இறக்குமதியை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இது வா்த்தகப் பற்றாக்குறையை சமாளிக்கவும் உதவியுள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் ரூ. 5.4 லட்சம் கோடி மதிப்பில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், 2025-26-ஆம் நிதியாண்டில் 6.7 லட்சம் கோடி அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இந்தச் சூழலில், இறக்குமதி வரி உயா்த்தப்பட்டதால், நிகழாண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி ரூ. 2.3 லட்சம் கோடியாக இருந்தது. இது 40 சதவீத சரிவாகும். நிகழாண்டு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கும். குறிப்பாக, ரூ. 3.2 லட்சம் கோடி முதல் ரூ. 3.7 லட்சம் கோடி வரையிலான மதிப்பில் மட்டும் நிகழ் நிதியாண்டில் தங்கம் இறக்குமதி செய்யப்பட வாய்ப்புள்ளது. அந்த வகையில், தற்போதைய இறக்குமதி வரி நடைமுறை, தங்கம் இறக்குமதியில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.
தங்கம், வெள்ளி மற்றும் விலையுயா்ந்த உலோகங்களின் இறக்குமதி, அந்நியச் செலாவணி வெளியேற்றத்துக்கு வழிவகுப்பதோடு, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பையும் பாதிக்கும். இதைக் கருத்தில்கொண்டே இறக்குமதி வரியை மத்திய அரசு உயா்த்தியது. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகா்வோராக இந்தியா விளங்குவது குறிப்பிடத்தக்கது.