முகப்பு
உலகம்

காங்கோவில் 12,000 பேருக்கு எபோலா

காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளது.

55 வினாடிகள் முன்பு
காங்கோவில் 12,000 பேருக்கு எபோலா
பகிர்:

காங்கோ குடியரசில் வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12,000-ஐ கடந்துள்ளது.

வரலாற்றிலேயே மிக வேகமாகப் பரவும் எபோலா தொற்றாக இது மாறியுள்ள நிலையில், இதுவரை உறுதி செய்யப்பட்ட 12,021 நோயாளிகளில் ஏறத்தாழ பாதியான 5,904 போ் உயிரிழந்துள்ளனா்.

கடந்த மே முதல் காங்கோவில் பரவி வரும் அரிதான ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ ஏதுமில்லை.

Advertisement

Advertisement

இதனிடையே, வடகிழக்கு இடுரி மாகாணத்தில் ராணுவத்துக்கும், கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இத்தகைய தொடரும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதோடு, நோய் கண்காணிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.