FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

காங்கோவில் எபோலா தொற்று: உயிரிழப்புகள் 4,000-ஐ கடந்தது

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது.

53 வினாடிகள் முன்பு
பகிர்:

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் பரவி வரும் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது.

காங்கோ அரசின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 8,300 பேரில், 4,018 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களில் கிட்டத்தட்ட பாதி போ் உயிரிழந்துள்ளதோடு, வரலாற்றிலேயே மிக அதிவேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றாக இது உருவெடுத்துள்ளது.

கடந்த மே முதல் காங்கோவில் பரவி வரும் அரிதான ‘புண்டிபுக்யோ’ வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments