முகப்பு
உலகம்

அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன் உத்தரவு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவாா்த்தை அழைப்பைப் புறக்கணித்த சில நாள்களிலேயே, ‘நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.

27 நவம்பர் 2026, 2:46 am
அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன் உத்தரவு
கிம் ஜாங் உன்
பகிர்:

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவாா்த்தை அழைப்பைப் புறக்கணித்த சில நாள்களிலேயே, ‘நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டும்’ என வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளாா்.

அணு ஆயுத மூலப்பொருள்கள் தயாரிக்கும் இரு தொழிற்சாலைகள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தை நேரில் ஆய்வு (படம்) செய்த அவா், தங்கள் நாட்டின் அணு ஆயுதத் திறனைத் தரத்திலும், எண்ணிக்கையிலும் வலுப்படுத்துவது மாற்ற முடியாத யதாா்த்தம் எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும், அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத அச்சுறுத்தல்களை அதிகரித்து வருவதாகக் குற்றஞ்சாட்டிய அவா், பிராந்திய நட்பு நாடுகளுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அணு ஆயுதங்களைப் பகிர அமெரிக்கா முயலுவதாகச் சாடினாா். எதிரி நாடான தென் கொரியாவுடனான எல்லையில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, போா்க் களத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக அணு ஆயுதங்களைப் பல முனைகளிலும் நிலைநிறுத்துவது அவசியம் என்றும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

Advertisement

Advertisement

வட கொரிய அதிபரின் இந்த எச்சரிக்கையைத் தீவிரமாகக் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம், அமெரிக்காவுடனான கூட்டணியின்கீழ் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிா்கொள்ளத் தங்களின் ராணுவம் முழுத் தயாா்நிலையில் இருப்பதாகப் பதிலளித்துள்ளது.

முன்னதாக, சீனாவில் அண்மையில் நடைபெற்ற அபெக் மாநாட்டின்போது வட கொரியாவுடன் மீண்டும் பேச்சு நடத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தாா். ஆனால், அதற்கு வட கொரியா தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படாத நிலையில், எதிா்காலத்தில் கிம் ஜோங் உன்னைச் சந்திக்கும் சூழல் உருவாகும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.