✕
முகப்பு

சீனா வந்தாரா கிம்-ஜாங் உன்? டிரம்ப் உடனான சந்திப்பும் இல்லை!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான சந்திப்பு நடைபெறாதது குறித்து...

22 வினாடிகள் முன்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் - கோப்புப் படம்
பகிர்:

சீனாவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான இருதரப்பு சந்திப்பு நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டுள்ளனர்.

இந்த மாநாட்டில், உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்களான டிரம்ப், புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் இடையே முத்தரப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. மேலும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும் டிரம்ப் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரைச் சந்திக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவின் ஷென்சென் நகரத்துக்கு வருகை தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்குச் செல்லவில்லை எனவும், அவர் வடகொரியாவின் ராணுவக் கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்து வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவருகிறது.

ஏற்கெனவே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் இருதரப்பு சந்திப்பு நடைபெறக் கூடும் என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். இருப்பினும், இதுகுறித்து அமெரிக்கா மற்றும் வடகொரிய அரசின் தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, அதிபர்கள் ஜின்பிங் மற்றும் புதின் உடனான சந்திப்புகளுக்குப் பிறகு தனது சீனப் பயணத்தை நிறைவு செய்யும் அதிபர் டிரம்ப், இன்றிரவு அமெரிக்காவுக்குப் புறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

highly anticipated bilateral meeting between U.S. President Trump and North Korean leader Kim Jong Un did not take place in China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.