சீனாவில் ஜின்பிங், டிரம்ப், புதின் முத்தரப்பு சந்திப்பு உறுதி!
சீன அதிபர் ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையேயான சந்திப்பு குறித்து...
சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையே முத்தரப்பு சந்திப்புக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சென்ஸென் நகரத்தில் வரும் நவ.18 மற்றும் நவ.19 ஆகிய இரு நாள்களில் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், ஏராளமான ஆசிய மற்றும் மேற்குலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் சீனா செல்லத் திட்டமிட்டுள்ளனர். மேலும், அதிபர் டிரம்ப்புடன் டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கும் சீனா செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாநாட்டின் நிகழ்ச்சிகளுக்கு இடையே டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் நேரில் சந்தித்து முக்கிய விவகாரங்கள் குறித்து உரையாடுவார்கள் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷியா இடையேயான அணுஆயுத ஒப்பந்தம் காலாவதியாகி 9 மாதங்கள் கடந்துள்ள நிலையில், அணுசக்தி வாய்ந்த இருநாடுகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இத்துடன், ஆசிய நாடுகள் பயணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேரில் சந்தித்து உரையாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.