FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரஷிய எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள், சுங்க வரிகள் ரத்து: டிரம்ப் அறிவிப்பு

'ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' கீழ் விதிக்கப்பட்டிருந்த எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை டிரம்ப் ரத்து செய்தது குறித்து...

17 அக்டோபர் 2026, 11:50 am IST
அமெரிக்க அதிபர் டிரம்ப். - படம்: ஏபி.
பகிர்:

வாஷிங்டன்: 'ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' கீழ் விதிக்கப்பட்டிருந்த எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 'தேசிய நலனை' கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை (செனட்), ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.

இந்த சட்டம் அக்.18 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகயளவில் பாதிக்கப்படும் என குற்றச்சாட்டுகள் எழுந்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், 'ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்' கீழ் விதிக்கப்பட்டிருந்த எண்ணெய், எரிவாயு கொள்முதல் மீதான தடைகள் மற்றும் சுங்க வரிகளை ரத்து செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 'தேசிய நலனை' கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவில், "லிண்ட்சே கிரஹாம்" சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இத்தகைய தடைகள், கட்டுப்பாடுகள் மற்றும் வரிகளை இதன் மூலம் நீக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் இத்தகைய விலக்கை அளிப்பது அமெரிக்காவின் தேசிய நலனுக்கு உகந்தது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

அதாவது, அமெரிக்காவே ரஷியாவிடம் இருந்து டீசல் வாங்கிக் கொண்டு ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீத வரி விதித்தால் அது முரண்பாடாக இருக்கும் என்பதால் தற்காலிகமாக 'லிண்ட்சே ஓ கிரஹாம்' சட்டத்தின்படி ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த 100 சதவீத வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

இதன் பின்னணியில் அமெரிக்காவின் எரிபொருள் விலையைக் குறைக்கும் நோக்கமும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கும் இது தற்காலிக பலனளிக்கும் ஒன்றே.

அதாவது, அடுத்த சில நாள்களில் ஏற்படும் எண்ணெய் விலை மாற்றங்களும் அமெரிக்காவின் அடுத்தகட்ட வர்த்தகக் கொள்கைகளும்தான் நீண்டகால பலன்களை அளிக்குமா என்பதை தீர்மானிக்கும் எனலாம்.

'லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷியா மற்றும் ஈரான் மீதான தடைகள் சட்டத்தின்'படி, ரஷியா மீது கடுமையான தடைகளை விதிக்கவும், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட ரஷிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் உலகின் மிகப்பெரிய நாடுகளின் மீது அதிகப்படியான சுங்க வரிகளை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவை (செனட்) டிரம்ப்பிற்கு அதிகாரம் அளித்தது. ரஷியாவுடன் தொடர்புடைய சில நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடைகளும் இதில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

US President Donald Trump has issued a waiver from sanctions, restrictions and duties under the Sanctioning Russia and Iran Act

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments