சீனாவில் டிரம்ப் - ஜின்பிங் - புதின் முத்தரப்பு சந்திப்பு தொடங்கியது!
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையேயான முத்தரப்பு சந்திப்பு தொடங்கியுள்ளது...
சீனாவில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இடையேயான முத்தரப்பு சந்திப்பு தொடங்கியுள்ளது.
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் புதின், அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டுள்ளனர்.
இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் முத்தரப்பு சந்திப்புக் கூட்டத்தை இன்று (நவ. 19) தொடங்கியுள்ளனர்.
Advertisement
Advertisement
ஈரான் உடனான அமெரிக்காவின் போர் மற்றும் உக்ரைன் உடனான ரஷியாவின் போர் நடைபெற்று வரும் சூழலில், உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்கள் மூவரும் முதல்முறை கூட்டாகச் சந்திக்கும் இந்த நிகழ்ச்சி சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில், அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், உக்ரைன் மற்றும் ஈரான் மீதான போர்கள், சர்வதேச வர்த்தகம், தொழில்நுட்பம், மூன்று நாடுகளுக்கு இடையேயான உறவுகள் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மூன்று நாடுகளும் இணைந்து அணு ஆயுதங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என உறுதி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ”நாம் உண்மையில் வரலாறு படைக்கிறோம்” எனக் கூறியுள்ளார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை.
முன்னதாக, அமெரிக்கா-ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம், கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியான நிலையில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
A trilateral meeting between U.S. President Trump, Chinese President Xi and Russian President Putin has begun in China.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.