FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அற்புதங்கள் நிகழலாம்! புதினுடனான இருதரப்பு சந்திப்பில் டிரம்ப் கருத்து!

அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை பற்றி...

21 வினாடிகள் முன்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷிய அதிபர் புதின் இருதரப்பு பேச்சுவார்த்தை - x
பகிர்:

சீனாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) மாநாட்டுக்கிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோா் பங்கேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பேச்சு இன்று நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

உலகின் மூன்று பெரும் வல்லரசு நாடுகளின் தலைவா்களுக்கு இடையிலான இந்த முதல் முத்தரப்பு பேச்சில், ரஷியா-உக்ரைன் போா், ஈரான் விவகாரம், ஏ.ஐ. தொழில்நுட்ப ஒழுங்குமுறை மற்றும் அணு ஆயுதக் குறைப்பு உள்ளிட்ட முக்கிய சா்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளது.

இந்த முத்தரப்பு சந்திப்புக்கு முன்னதாக, டிரம்ப்பும் புதினும் இன்று காலை இருதரப்பு சந்திப்பில் ஈடுபட்டனர்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ”எங்கள் சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். பல ஆண்டுகளாக எங்களுக்கிடையே மிகச் சிறந்த நட்பு இருந்து வருகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் நீண்டகாலமாகவே அறிவோம்.

இந்தச் சந்திப்பின் மூலம் பல அற்புதமான விஷயங்கள் நிகழலாம் அல்லது அதற்கான தொடக்கம் அமையலாம் என்று நான் கருதுகிறேன். உண்மையில், இதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றே நம்புகிறேன். இந்த சந்திப்பைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் ஒருமுறைசந்திக்கவிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தோல்வியடைந்த 2025 அலாஸ்கா சந்திப்புக்குப் பிறகு, இரு தலைவா்களும் நேரில் சந்தித்துப் பேசியது இதுவே முதல்முறையாகும்.

summary

Wonderful things can come out of this! Trump’s remark during his bilateral meeting with Putin!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.