FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சீனா சென்றார் டிரம்ப்! அதிபர்கள் ஜின்பிங், புதின் உடன் முத்தரப்பு சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனா நாட்டுக்குச் சென்றடைந்தது குறித்து...

12 வினாடிகள் முன்பு
சீனாவில் அதிபர் ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் - AP
பகிர்:

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றடைந்தார்.

ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) உச்சிமாநாட்டை ஒட்டி ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஷென்சென் நகரத்தில் திரண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் பங்கேற்க இன்று (நவ. 18) பிலிப்பின்ஸ் நாட்டில் இருந்து சீனாவின் ஷென்சென் நகரத்துக்கு விமானம் மூலம் சென்றடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, சீன அதிபர் ஷி ஜின்பிங் நேரில் சென்று வரவேற்றார். மேலும், அவருக்கு சீன அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாநாட்டில் பங்கேற்கும் மெக்சிகோ அதிபர் கிளாவ்டியா ஷெயின்பாம் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி ஆகியோருடன் அதிபர் டிரம்ப் தனிப்பட்ட சந்திப்பை மேற்கொள்வார் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் இடையே நாளை முத்தரப்பு சந்திப்பு நடைபெறவுள்ளது. உலகின் மிகப் பெரிய அணு ஆயுத வல்லரசு நாடுகளின் தலைவா்கள் மூவரும் முதல்முறை கூட்டாகச் சந்தித்துப் பேசுவது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா-ரஷியா இடையிலான கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான ‘நியூ ஸ்டாா்ட்’ கடந்த பிப்ரவரி மாதம் காலாவதியான நிலையில், சீனாவையும் உள்ளடக்கிய புதிய முத்தரப்பு அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

US President Donald Trump arrived in China on a state visit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.