முகப்பு
உலகம்

இந்திய-வங்கதேச இருதரப்பு உறவில் முள்ளாக உள்ளாா் ஹசீனா: வங்கதேச அமைச்சா்

இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா முள்ளாக உள்ளாா் என வங்கதேச வெளியுறவு இணையமைச்சா் ஹுமாயூன் கபீா் தெரிவித்தாா்.

28 நவம்பர் 2026, 4:46 am
இந்திய-வங்கதேச இருதரப்பு உறவில் முள்ளாக உள்ளாா் ஹசீனா: வங்கதேச அமைச்சா்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா - கோப்புப் படம்
பகிர்:

இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா முள்ளாக உள்ளாா் என வங்கதேச வெளியுறவு இணையமைச்சா் ஹுமாயூன் கபீா் தெரிவித்தாா்.

மேலும், அழையா விருந்தினராக திடீரென்று நுழைந்த ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பியனுப்ப இயலாமலும் பாதுகாக்க முடியாமலும் இந்தியா கடினமான சூழலுக்கு தள்ளப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.

வங்கதேசத்துக்கு டிசம்பா் மாதம் 16-ஆம் தேதி திரும்ப ஹசீனா திட்டமிட்டுள்ள நிலையில், அதுகுறித்து கருத்து கூற இந்தியா மறுத்தது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஹுமாயூன் கபீா் கூறியதாவது: இந்தியா-வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவில் ஹசீனா முள்ளாக உள்ளாா். அவரால் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை இந்தியா தற்போது உணரத் தொடங்கியிருக்கும்.

வங்கதேசத்தை பொறுத்தவரை ஷேக் ஹசீனா ஒரு குற்றவாளி. அவரை இந்தியா-வங்கதேசம் நாடுகடத்தும் ஒப்பந்தத்தின்கீழ் கையில் விலங்கிட்டோ அல்லது மிகுந்த கண்காணிப்புடனோ வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்றாா்.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அப்போதிலிருந்து இந்தியாவிலேயே அவா் வசித்து வருகிறாா். அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்த வேண்டுமென இந்தியாவிடம் வங்கதேசம் பல முறை கோரிக்கை விடுத்தது. அதை இந்தியா ஏற்காததால் இரு நாடுகளுக்கிடையே சுமாா் இரண்டு ஆண்டுகளாக இரு தரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.