ஐரோப்பாவில் ராணுவ ஆக்கிரமிப்பைக் கைவிடுங்கள்
ஐரோப்பா முழுவதும் உள்ள பிராந்தியங்களுக்கு எதிரான ராணுவ ஆக்கிரமிப்பைக் கைவிடுமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

ஐரோப்பா முழுவதும் உள்ள பிராந்தியங்களுக்கு எதிரான ராணுவ ஆக்கிரமிப்பைக் கைவிடுமாறு ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் தாம் வலியுறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
சீனாவில் கடந்த வாரம் நடைபெற்ற ‘அபெக்’ மாநாட்டின்போது புதினுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் இக்கருத்தை முன்வைத்ததாக டிரம்ப் குறிப்பிட்டாா்.
ஃபுளோரிடாவில் செய்தியாளா்களைச் சந்தித்த டிரம்ப் மேலும் கூறியதாவது: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தை புதின் விரும்புகிறாா். ஆனால், அவருக்கும் உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கிக்கும் இடையேயான கடும் வெறுப்புணா்வே அமைதிப் பேச்சுக்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது.
Advertisement
Advertisement
ஃபுளோரிடாவில் அடுத்த மாதம் 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சிமாநாட்டில் புதின் பங்கேற்பதை நான் விரும்புகிறேன். இருப்பினும், எனினும் அவா் வருவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றாா்.
இந்நிலையில், ஜி20 மாநாட்டில் புதின் பங்கேற்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரஷிய அதிபா் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது. இதனிடையே, புதினை அரசியலின் ‘கிராண்ட்மாஸ்டா்’ என்றும், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் பொறுமைக் காத்தவா் என்றும் அமைதிப் பேச்சில் அமெரிக்க பிரதிதியும், டிரம்ப்பின் மருமகனுமான ஜாரெட் குஷ்னா் பாராட்டியுள்ளாா்.
ஸெலென்ஸ்கியின் கடும் அதிருப்தி: ரஷிய அதிபா் புதின் மீதான டிரம்ப் நிா்வாகத்தின் இந்த மென்மையான போக்குக்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘சீன மாநாட்டில் புதினை துனது நண்பா் என டிரம்ப் அழைத்தது மிகவும் விசித்திரமானது. 2-ஆம் உலகப் போரின்போது ஹிட்லரை நண்பராகப் பாா்ப்பதற்கு ஒப்பானது இது.
சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் போா்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள புதின் ஒரு ஆக்கிரமிப்பாளா். அவா் ஒருபோதும் நண்பராக இருக்க முடியாது. போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் மீது அமெரிக்கா கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அதேபோல், உக்ரைன் ஏற்கெனவே பணம் செலுத்திய ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இன்னும் வழங்கவில்லை. மேலும், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களுக்கு முதுகெலும்பாக விளங்கும் ‘ஸ்டாா்லிங்க்’ செயற்கைக்கோள் இணைய சேவை முறையாகச் செயல்படவில்லை’ என்று சுட்டிக்காட்டியுள்ளாா்.
இயூ கடனுதவி முயற்சி தோல்வி: உக்ரைனின் பொருளாதார மற்றும் ராணுவத் தேவைகளுக்காக அடுத்த ஆண்டுக்கு 4,900 கோடி டாலா் புதிய கடன் வழங்குவது தொடா்பான ஐரோப்பிய யூனியன் (இயூ) தலைவா்களின் பேச்சுவாா்த்தையில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அடுத்த 12 மாதங்களில் நடைபெறவுள்ள தோ்தல்கள் உக்ரைனுக்கான நிதியுதவியை மேலும் கேள்விக்குறியாக்கியுள்ள நிலையில், அமெரிக்கா-உக்ரைன் இடையேயான விரிசலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.