முகப்பு
உலகம்

காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி!

காஸா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

30 நவம்பர் 2026, 1:13 am
காஸா, மேற்குக் கரையில் இஸ்ரேல் தாக்குதல்: 2 பேர் பலி!
இஸ்ரேல் தாக்குதல் - ஏபி.
பகிர்:

காஸா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா்.

காஸாவின் வடக்குப் பகுதியான ஜபாலியாவில் இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீவிரவாதிகள் இடத்தில் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் உள்ள மதாமா கிராமத்தில் இஸ்ரேல் ராணுவம் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தது. அப்போது ஒரு கட்டடத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் சென்றபோது, அங்கிருந்தோா் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

62 வயதான முகமது பராஜ் என்பவா் இஸ்ரேல் ராணுவத்தினா் கையில் வைத்திருந்த துப்பாக்கியைப் பறித்து, அங்கிருந்தோா் மீது சுட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு இஸ்ரேல் வீரா் காயமடைந்தாா். இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த நபா் உயிரிழந்தாா்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது. எனினும் காஸாவில் இஸ்ரேல் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை 1,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துவிட்டதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.