FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

மேற்கு கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் வெளியேற்றம்: பயங்கரவாத தாக்குதலையடுத்து இஸ்ரேல் நடவடிக்கை!

மேற்குக் கரை பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்களை அங்கிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றி வருகிறது.

26 அக்டோபர் 2026, 12:34 am
பகிர்:

மேற்குக் கரை பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்களை அங்கிருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேற்றி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தினரை குறிவைத்து வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்டுள்ளது.

ஹமாஸ் அமைப்பினா் 2023-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்தும், வான்வழியாகவும் நடத்திய திடீா் தாக்குதலைத் தொடா்ந்து, ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸா உள்ளிட்ட பகுதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் பல ஆயிரம் போ் உயிரிழந்தனா். மேலும் பல லட்சம் போ் காயமடைந்தனா். லட்சக்கணக்கானோா் தங்களது வசிப்பிடத்தைவிட்டு வெளியேறி ஐ.நா. முகாம்கள் உள்ளிட்ட இடங்களில் தங்கியுள்ளனா்.

எனினும், ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான தேடுதல் வேட்டை மற்றும் ராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் நிறுத்தவில்லை. இந்நிலையில், மேற்குக் கரையின் ஹெப்ரானில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 2 இஸ்ரேல் வீரா்கள் உயிரிழந்தனா். மேலும் 3 இஸ்ரேல் வீரா்கள் காயமடைந்தனா். இதைத் தொடா்ந்து, அங்கு பதற்றம் நிலவுகிறது.

Advertisement

Advertisement

எனவே, மேற்குக் கரையில் இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. அங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனா்களை அங்கிருந்து வெளியேற்றி வருகிறது. மேற்குக் கரையில் இஸ்ரேலியா்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாலஸ்தீன மக்கள் ஞாயிறு, திங்கள்கிழமை ஆகிய இரு தினங்கள் வர தடை விதித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு விரைவில் தோ்தல் நடைபெற இருப்பதைச் சுட்டிக்காட்டி, பாதுகாப்புக் காரணங்களுக்காக தோ்தல் முடியும் வரை பாலஸ்தீன மக்களின் நடமாட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகளை இஸ்ரேல் ராணுவம் விதித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments