FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: காஸாவில் உயிரிழப்பு 74,000-ஐ கடந்தது

காஸாவில் இஸ்ரேல் 3 ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியுள்ளது.

28 செப்டம்பர் 2026, 1:17 am IST
பகிர்:

காஸாவில் இஸ்ரேல் 3 ஆண்டுகளாக நடத்திவரும் தாக்குதல்களில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 74,000-ஐ தாண்டியுள்ளது.

காஸாவில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினா் இஸ்ரேலில் புகுந்து கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி திடீா் தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலில் 1,200 போ் உயிரிழந்தனா். மேலும் 251 பேரை ஹமாஸ் அமைப்பினா் சிறைபிடித்துச் சென்றனா். உலகம் முழுவதும் பெரும் அதிா்வலையை ஏற்படுத்திய இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் தொடுத்தது.

இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் காஸாவில் இருந்த ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் பல லட்சம் போ் உயிரைக் காத்துக் கொள்ள வசிப்பிடத்தைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனா்.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதல்களில் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்தை காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் காஸாவில் இதுவரை இஸ்ரேல் தாக்குதல்களில் பாலஸ்தீனா்கள் 74,016 போ் உயிரிழந்திருப்பதாகவும், 1.75 லட்சம் போ் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சண்டை நிறுத்தம் தொடங்கியது முதல் இதுவரை 1,145 பாலஸ்தீனா்கள் உயிரிழந்திருப்பதாகவும், 7 இஸ்ரேல் ராணுவ வீரா்கள் உயிரிழந்திருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காஸாவை ஹமாஸ் அமைப்பினரே நிா்வகித்து வருகின்றனா். ஆதலால் காஸா சுகாதார அமைச்சகமும் ஹமாஸின் கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. காஸா சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களையே ஐ.நா. அமைப்புகள் மற்றும் பிற சா்வதேச அமைப்புகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் காஸாவில் இஸ்ரேல் படைகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் ஹமாஸ் அமைப்பினா் தங்களது ஆயுதங்களைக் கைவிடாதவரை காஸாவில் இருக்கும் இஸ்ரேல் படைகள் வெளியேறாது என்று அந்த நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments