காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,500 ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,500 ஆக அதிகரித்துள்ளது குறித்து...
காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,500 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில், பாலஸ்தீன ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் போர் தொடங்கியது. இந்தப் போரில், காஸாவில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்த போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2025 அக்டோபர் மாதம் அமல்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
ஆனால், காஸாவில் உள்ள ஹமாஸ் படைகளுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறும் இஸ்ரேலிய படைகள், தொடர்ந்து அங்குள்ள மக்கள் குடியிருப்புகள், அகதி முகாம்கள் ஆகிவற்றைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 அக்டோபர் 7 முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,494 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (அக். 21) அறிவித்துள்ளது.
இத்துடன், இஸ்ரேலிய தாக்குதல்களால் படுகாயமடைந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,75,604 ஆக அதிகரித்துள்ளது. காஸாவிலுள்ள மருத்துவக் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதால் அங்கு உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் தவித்து வருகின்றனர்.
இதில், கடந்த 2025 அக்டோபர் மாதம் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகான இஸ்ரேலின் தாக்குதல்களால் 1,534 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The death toll from Israel's attacks on Gaza has reportedly risen to 74,500.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.