விமான விபத்து தடுக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
ஃப்ளைதுபாய் விமானம் சதி முயற்சியில் பயணிகள் பாதுகாக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணம் என வெளியாகியுள்ள தகவல் குறித்து...
ஃப்ளைதுபாய் விமானம் சதி முயற்சியில் பயணிகள் பாதுகாக்கப்பட்டதற்கு 6 வயது சிறுமியும் காரணம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் இருந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவிற்கு புதன்கிழமை (செப். 30) காலை 174 பயணிளுடன் சென்ற விமானத்தில் சக விமானி ஒருவர், இந்திய விமானி ஸ்மித் மச்சாரைக் கத்தியால் குத்தினார்.
கத்திக்குத்தால் ரத்த வெள்ளத்தில் இருந்தபோதும், தாக்குதலுக்குள்ளான விமானி, சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கி அனைத்து பயணிகளின் உயிரையும் காப்பாற்றினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், விமானி ஸ்மித் மச்சாரை சக விமானியின் தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதற்கு 6 வயது சிறுமி ஒருவரும் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது நினா (6) என்ற சிறுமி, விமானத்தின் கழிப்பறையில் இருந்துள்ளார். அவரின் தந்தை, விமானத்தின் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். இதனிடையே, கழிப்பறைக்குள் நினா அலறுவதைக் கேட்ட சிறுமியின் தந்தை, அவரை மீட்டபோது, அப்பா, நாம் சாக விரும்பவில்லை என்று சிறுமி கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விமானிகளின் அறைக்குள் சிறுமியின் தந்தை நுழைந்தார். அவர் நுழையும்போதுதான் விமானி ஸ்மித் மச்சார் கத்திக்குத்தி தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டார். இதனையடுத்து, சிறுமியின் தந்தையுடன் மேலும் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய ஆயுதமேந்திய விமானியை கட்டிப் போட்டனர்.
விமானி ஸ்மித் மச்சார் தாக்குதலுக்குள்ளாகி ரத்த வெள்ளத்தில் கிடந்தபோதிலும், விமானத்தில் பயணித்த பணியில் இல்லாத வேறு விமானிகளுடன் சேர்ந்து விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
Flydubai Flight: 6-Year-Old Nina Manes Who Helped Avert A Major Disaster
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.