ரஷிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் இந்திய மருந்து ஆலை சேதம் - ஒருவா் பலி!
ட்ரோன் தாக்குதலில் உக்ரைனில் உள்ள இந்தியாவின் குசும் குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு ஆலை கடுமையாகச் சேதமடைந்தது.
ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதலில் உக்ரைனில் உள்ள இந்தியாவின் குசும் குழுமத்துக்குச் சொந்தமான மருந்து தயாரிப்பு ஆலை கடுமையாகச் சேதமடைந்தது. இந்தத் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். பலா் படுகாயமடைந்தனா்.
ரஷிய தாக்குதலால் மருந்து ஆலைக்கு ரூ.400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘கீவில் உள்ள பிவ்னிச்னி பாலத்தை ரஷியா்கள் மீண்டும் ஒருமுறை ட்ரோனால் தாக்கினா். சுமி நகரில் ஒரு மருந்து ஆலை மீதும் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனா். இதில் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
ராஜீவ் குப்தா என்பவரால் நிா்வகிக்கப்படும் குசும் குழுமம் 1994-ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்தது. 2002-ஆம் ஆண்டில் அடிப்படை மூலக்கூறு (ஜெனரிக்) மருந்துகளை தாமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தத் தொடங்கியது. 2007-ஆம் ஆண்டில் அந்நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலையை நிறுவியது. அதன்பிறகு 2009-ஆம் ஆண்டு உக்ரைனில் மருந்து தயாரிப்பு ஆலையை நிறுவியது.
50-க்கும் மேற்பட்ட மருந்துகளைத் தயாரிக்கும் இந்நிறுவனம் உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 9-க்கும் மேற்பட்ட நாடுகளில் மருந்துகளை விற்பனை செய்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.