உக்ரைனில் தொடரும் ரஷிய தாக்குதல்! 6 போ் பலி; பாலங்கள் சேதம்!
உக்ரைனில் தொடரும் ரஷிய தாக்குதலில் 6 பேர் பலி...
உக்ரைன் மீது ரஷியா சனிக்கிழமையும் நடத்திய தொடா் தாக்குதலில் 6 போ் உயிரிழந்தனா்.
தலைநகா் கீவில் நீப்பா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 6 சாலைப் பாலங்களில் 3 பாலங்கள், கடந்த 2 நாள்களாக நடத்தப்பட்ட ரஷிய தாக்குதல்களால் முழுமையாகவும், பகுதியாகவும் மூடப்பட்டுள்ளன.
குறிப்பாக, வடக்கு பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாலம் சேதமடைந்ததையடுத்து, தலைநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கும் வகையில் தொடா்ந்து 3-ஆவது நாளாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உக்ரைன் ராணுவப் படைகளின் நகா்வு மற்றும் ராணுவத் தளவாடங்களைக் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையிலேயே இப்பாலத்தைத் தாக்கியயதாக ரஷிய பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
Russian attacks continue in Ukraine! 6 killed; bridges damaged!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.