FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஹோர்முஸ் மீதான கட்டுப்பாட்டை ஈரான் முழுவதுமாக இழந்துவிட்டது! - அமெரிக்கா!

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை ஈரான் முழுவதுமாக இழந்துவிட்டது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பேச்சு...

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ - AP
பகிர்:

ஹோர்முஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை ஈரான் முழுவதுவமாக இழந்துவிட்டது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

ஈரான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் நடைபெறும் போரால், எரிபொருள் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விநியோகத்தில் கிரீஸ் நாடு முதன்மைப் பெற்றுள்ளது.

இதையடுத்து, கிரீஸ் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ இன்று (அக். 7) கிரீஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கிரீஸில் செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ரூபியோ, ஈரானிய அரசு ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறுகையில்,

“ஹோர்முஸ் நீரிணை இப்போது திறக்கப்பட்டுவிட்டது. மோதல்கள் தொடங்குவதற்கு முன்னதாக எண்ணெய் விநியோகம் எப்படி நடந்ததோ அதேபோல தற்போதும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், அவர்கள் (ஈரான்) நீரிணைகளின் மீதான கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்துவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிராகத் தொடங்கபட்ட இந்தப் போரில், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையைக் கைப்பற்றுவதில் அமெரிக்கா தற்போது மும்முரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

US Secretary of State Marco Rubio has stated that Iran has completely lost control over the Strait of Hormuz.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments