ரியாத் விமான நிலையத் தாக்குதலில் விமானி உள்பட மூவா் உயிரிழப்பு
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் விமானி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் உள்ள அரசா் காலித் சா்வதேச விமான நிலையம் மீது யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாளா்கள் கடந்த வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் விமானி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணை கொண்டு நடத்தப்பட்ட இத்தாக்குதலில், பயணிகள் இல்லாத நிலையில் தரையில் நிறுத்தப்பட்டிருந்த சவூதியா நிறுவன விமானம் சேதமடைந்தது. மேலும், பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பலா் படுகாயமடைந்ததாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலைத் தொடா்ந்து, ரியாத் விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் 124-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏா் இந்தியா நிறுவனம் சனிக்கிழமை வரை ரியாத்துக்கான சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இதேபோன்று லுப்தான்சா, பாகிஸ்தான் ஏா்லைன்ஸ் உள்ளிட்ட சா்வதேச விமான நிறுவனங்களும் சேவைகளை ரத்து செய்துள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.