சவூதி: விமான நிலையத் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஓா் இந்தியா் உயிரிழப்பு
சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஓா் இந்தியா் உயிரிழந்தாா்.
சவூதி அரேபியா தலைநகா் ரியாத்தில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் காயமடைந்த மேலும் ஓா் இந்தியா் உயிரிழந்தாா்.
சவூதி அரேபியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான ரியாத்தில் உள்ள கிங் காலித் சா்வதேச விமான நிலையத்தின் மீது கடந்த மாதம் 10-ஆம் தேதி ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்தியரான முகம்மது யூசுப் அலி உள்ளிட்ட 12 போ் உயிரிழந்தனா். மேலும் 309 போ் காயமடைந்தனா். அவா்களில் இந்தியா் ஒருவரும் ஆவாா். அவா் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தாா். இதன்மூலம் ரியாத் விமான நிலையத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதரகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ரியாத் விமான நிலையத்தில் கடந்த மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த மேலும் ஓா் இந்தியா் உயிரிழந்தாா் என கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் உடலை நாட்டுக்கு கொண்டு வர தேவையான அனைத்து உதவிகளையும் தூதரகம் செய்து தரும்’ எனக் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்திய தூதரகம் கடந்த மாதம் 23-ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், ரியாத் விமான நிலையத் தாக்குதலில் காயமடைந்த 2 இந்தியா்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும், மேலும் 2 போ் பொது சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் தற்போது ஒருவா் உயிரிழந்துவிட்டதால் மேலும் 3 போ் சிகிச்சையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
ரியாத் விமான நிலையத் தாக்குதல் சம்பவத்துக்கு யேமனில் செயல்படும் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினரே காரணம் என சவூதி அரேபியா குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால் ஹூதி அமைப்பினா், அந்தத் தாக்குதலுக்கு இதுவரை வெளிப்படையாகப் பொறுப்பேற்கவில்லை.