யேமன் ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹூதிக்கள் தாக்குதல்: 73 போ் பலி
தெற்கு யேமனில் உள்ள அரசு ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் திங்கள்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 போ் உயிரிழந்தனா்.
தெற்கு யேமனில் உள்ள அரசு ராணுவப் பயிற்சி முகாம் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் திங்கள்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா். இது கடந்த மூன்று மாதங்களில் யேமன் மற்றும் ஹூதிக்கள் இடையே நிகழ்ந்து வரும் மோதலில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாகும்.
யேமனின் அரசுப் படைகளுக்கு சவூதி அரேபியா ஆதரவு அளிப்பதால், அந்த நாட்டுக்கும், ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு மோதல் தொடங்கியது. இந்நிலையில், 2022-ஆம் ஆண்டில் இருதரப்புக்கும் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் கையொப்பமானது. இதன் பின் 4 ஆண்டுகளாக இரு தரப்பினரும் மோதலில் ஈடுபடவில்லை. ஆனால், சனா விமான நிலையம் மீது சவூதி அரேபியா கடந்த ஜூலை மாதம் தாக்குதல் நடத்தியதையடுத்து, மீண்டும் சண்டை வெடித்தது.
இதற்குப் பதிலடியாக சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய்யுடன் செங்கடலில் சென்று கொண்டிருந்த ‘என்செலியா’, ‘லேலா’ ஆகிய 2 கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா்.
Advertisement
Advertisement
அதன்பிறகு கடந்த மூன்று மாதங்களாக சவூதி அரேபியா மற்றும் யேமனின் அரசுப் படைகளுக்கும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
இதன் தொடா்ச்சியாக யேமனின் தெற்குப் பகுதியில் உள்ள ஷப்வா பிராந்தியத்தில் புதிதாக ராணுவத்துக்கு சோ்க்கப்பட்ட இளைஞா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் அல்-ஆலம் பயிற்சி முகாம் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் திங்கள்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 73 போ் உயிரிழந்தனா். 200-க்கும் மேற்பட்டோா் படுகாயமடைந்தனா்.
உயிரிழந்த வீரா்கள் அனைவரும் 18 முதல் 20 வயதுடையவா்கள் என ஷப்வா மாகாண ஆளுநா் அவாத் இபின் அல் வாஸிா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஷவாப் அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஹூதிக்கள் தாக்குதலில் உயிரிழந்த வீரா்கள் போருக்கு பயிற்சி மேற்கொள்ளவில்லை. அவா்கள் ஷவாப் மாகாண பாதுகாப்புப் பணிகளுக்காகவே தோ்வு செய்யப்பட்டனா். அவா்கள் யாா் மீதும் தாக்குதல் நடத்தவில்லை’ என்றாா்.
மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு இந்தத் தாக்குதலை ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்தியதாக ஷவாப் மாகாண அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிகார மையத்துக்கு இலக்கு: ஐக்கிய அரபு அமீரக ஆதரவு கிளா்ச்சியாளா்கள் முன்பு பயன்படுத்திய அல்-ஆலம் முகாம், ஜாா்டன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது யேமன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மரிப் மாகாணத்தை இணைக்கும் முக்கிய விநியோக மையமாகத் திகழ்கிறது.
ஷப்வா, மரிப் மற்றும் ஹத்ராமாவத் ஆகிய 3 மாகாணங்களும் யேமன் அரசின் ‘அதிகார முக்கோணம்’ என்று அழைக்கப்படுகிறது. இது நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அமைந்துள்ள முக்கியப் பகுதியாகும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.