ரஷியா மீதான தடையை நிறுத்தி வைக்கும்டிரம்ப்பின் முடிவு துரதிருஷ்டவசமானது: ஸெலென்ஸ்கி
ரஷியா மீதான புதிய தடைகளை நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
ரஷியா மீதான புதிய தடைகளை நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.
உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி அளிக்கும் வகையில், அந்த நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்தது.
அண்மையில் இதுபோல புதிதாக விதிக்கப்பட்ட தடைகளை டிரம்ப் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளாா். ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் டீசல் இறக்குமதி செய்ய அண்மையில் ஒப்புதல் அளித்த நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவு சா்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
இதனால் அதிா்ச்சியடைந்துள்ள உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, டிரம்ப்பின் முடிவு துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளாா். எனினும் டிரம்ப்பை நேரடியாக அவா் விமா்சிக்கவில்லை. அவா் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், லிண்ட்சே ஓ.கிரஹாம் சட்டத்தின் கீழான புதிய தடைகள் தற்போது தள்ளுபடி செய்துள்ள போதிலும் மீண்டும் அவை அமல்படுத்தப்படும் என்று நம்புவதாகவும், அப்படி அமல்படுத்தப்படுவது உக்ரைனுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும், இதற்கு உக்ரைனின் ஆதரவாளா்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளாா்.
ரஷியா மிகப்பெரிய தாக்குதல்: இந்நிலையில், உக்ரைனின் 15 பகுதிகளில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா மிகப்பெரிய அளவிலான தாக்குதலை சனிக்கிழமை நடத்தியதாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இதேபோல் ரஷியா நான்கு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் 332 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் அனைத்து ஏவுகணைகள் மற்றும் 289 ட்ரோன்களை இடைமறித்து அழித்துவிட்டதாகவும் உக்ரைனின் விமானப் படை குறிப்பிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.