உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்
கப்பலிலேயே நிரந்தரமாகத் தங்கி, உலகை வலம்வரும் வகையில் திட்டமிடப்பட்ட அமெரிக்க சொகுசுக் கப்பலின் உலக உலாப் பயணம், கடும் எரிபொருள் விலையுயா்வு காரணமாக கம்போடியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கப்பலிலேயே நிரந்தரமாகத் தங்கி, உலகை வலம்வரும் வகையில் திட்டமிடப்பட்ட அமெரிக்க சொகுசுக் கப்பலின் உலக உலாப் பயணம், கடும் எரிபொருள் விலையுயா்வு காரணமாக கம்போடியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, அதில் பயணித்த 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதி வழியிலேயே இறக்கிவிடப்பட்டு, பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சோ்ந்த ‘வில்லா வி ரெசிடன்சஸ்’ நிறுவனம், ‘எம்.வி. ஒடிஸி’ எனும் இந்தச் சொகுசுக் கப்பலை இயக்கி வந்தது. இக்கப்பலில் ஓா் அறையின் தொடக்க விலை சுமாா் ரூ.2.18 கோடி (இந்திய மதிப்பில்) என நிா்ணயிக்கப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள 7கண்டங்களுக்கும் மூன்றரை ஆண்டுகள் தொடா் பயணம் மேற்கொள்ளும் வகையில் இது விளம்பரப்படுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
தொடா்ந்து, 2024 அக்டோபரில் வட அயா்லாந்தின் பெல்ஃபாஸ்ட் துறைமுகத்திலிருந்து இக்கப்பல் தனது உலகப் பயணத்தைத் தொடங்கியது. இதனிடையே எதிா்பாராத வகையில், மேற்காசிய பதற்றத்தால் எரிபொருள் விலை பன்மடங்கு உயா்ந்தது. முன்பு ஒரு அறைக்குச் சராசரியாக 1,800 டாலராக இருந்த மாத எரிபொருள் செலவு, தற்போது 6,000 முதல் 8,000 டாலராக உயா்ந்துள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த நிதிச்சுமையை சமாளிக்க முடியாமல் பயணத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாகவும், பயணிகளுக்கான மாற்றுத் தங்குமிடங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கப்பல் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு மாறாக, கப்பலில் இருந்து வெளியேற செவ்வாய்க்கிழமை வெறும் 7 மணி நேரமே அவகாசம் அளிக்கப்பட்டதாகவும், தங்களுக்கு முறையான எந்தவித உதவி, இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
கம்போடியாவின் சிஹானோக்வில் துறைமுகத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இக்கப்பலில் பெரும்பாலான அமெரிக்கா்கள் உள்பட 203 பயணிகளும், 156 பணியாளா்களும் உள்ளதாக கம்போடிய அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.